காரைக்குடி சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் நிகழ்ச்சி
காரைக்குடி:காரைக்குடி ராமலிங்கசவுடேஸ்வரி அம்மன்கோயில் 101வது பொங்கல் விழாவையொட்டி கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.காரைக்குடி நா.புதுார் வீரையன் கண்மாய் அருகேயுள்ள ஒன்பது நாடு தேவாங்கர் மகாஜன சபைக்கு பாத்தியமான ராமலிங்க சவுடேஸ்வரி கோயிலின் 101வது பொங்கல் திருவிழா நடந்தது.மே 20ம் தேதி கணபதி ஹோமம் மற்றும்காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று காலை முத்தாலம்மன் கோயிலில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு வீதிகள்வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை வந்தடைந்தது. கரகத்தின் முன்பு பக்தர்கள் கத்திபோட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மகா அபிஷேகம், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து முளைப்பாரி விழாவும், இரவு 9:00 மணிக்கு அம்மன் குதிரை வாகனத்தில் மின் ரதத்தில்வீதி உலா வருதலும் நடந்தது.