மேலும் செய்திகள்
மழை நீரை அகற்றுங்கள்
16-Dec-2024
இளையான்குடி: இளையான்குடி அருகே கொங்கம்பட்டி, சீத்துாரணி, கல்லுாரணி செல்லும் தார் ரோடு தற்போது மண் ரோடாக மாறியதால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இளையான்குடியிலிருந்து ஆர்.எஸ்.மங்கலம் செல்லும் ரோட்டிலிருந்து கொங்கம்பட்டி, சீத்துாரணி,கல்லுாரணி செல்லும் ரோடு வழியாக கிராம மக்கள் தினமும் இளையான்குடி மற்றும் சாலைக்கிராமம், ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இளையான்குடியில் ஏதேனும் போக்குவரத்து பாதிக்கப்பட்டால் கொங்கம்பட்டி ரோடு வழியாக பரமக்குடியிலிருந்து காரைக்குடிக்கும் காரைக்குடியிலிருந்து பரமக்குடிக்கும் பஸ் போக்குவரத்து நடைபெற்று வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ரோட்டில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய் பதிப்பதற்காக ரோட்டை உடைத்து குழாய்களை பதித்தனர்.மீண்டும் தார் ரோடு போடாமல் விட்டதால் பெய்த பலத்த மழை காரணமாக சேறும்,சகதியுமாக மாறி மக்கள் வாகனங்களில் செல்ல முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16-Dec-2024