இருளில் கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷன்
காரைக்குடி: கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனில் மின்விளக்கு எரியாததால் நடைமேடை மற்றும் கழிப்பறை இருளில் மூழ்கிக் கிடக்கிறது. காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக காரைக்குடி, திருச்சி, மானாமதுரை, விருதுநகர், ராமேஸ்வரம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் சென்று வருகின்றன. கோட்டையூரை ஒட்டி அழகப்பா பல்கலை., உடற்கல்வியியல் கல்லூரி, உட்பட ஏராளமான பள்ளி கல்லூரிகள் செயல்படுகின்றன. காலை மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் அதிகமாக கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து செல்கின்றனர். இந்த ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடையில் போதிய மின்விளக்கு வசதி இல்லை. இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கையும் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.