உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

காரைக்குடி:ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில தடகளப் போட்டி நடந்தது. இதில் அழகப்பா தடகள அகாடமி வீரர் கோகுல், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில், அழகப்பா தடகள அகாடமி வீரர் தரணிதரன் 69.78 மீ., ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். மாணவி மினு சஞ்சனா, 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் 33.86 மீ., ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கமும், குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.இதன் மூலம், இவர்கள் தேசிய அளவில் நடைபெறும் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை அழகப்பா கல்விக் குழும தலைவர் ராமநாதன் வைரவன், நிர்வாக அறங்காவலர் தேவி அலமேலு வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை