உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புத்துாரில் கும்பாபிஷேகம்

 திருப்புத்துாரில் கும்பாபிஷேகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் பெரியகடைவீதி பெரியபள்ளிவாசல் அருகிலுள்ள சிதம்பர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பின் திருப்பணி நடந்தது. நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, தனபூஜை, கோபூஜையுடன் கண்பதி பூஜையும் ஹோமம் நடைபெற்று வாஸ்துசாந்தி நடந்தது. மாலையில் ஆதித்திருத்தளிநாதர் ஆலயத் திலிருந்து பூமிபூஜை செய்து மண் எடுத்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக வந்து யாகசாலை வந்தனர். பின்னர் முதலாம் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. பூர்ணாகுதிக்கு பின்னர் யாகசாலை யிலிருந்து பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்களால் கலசங்கள் புறப்பாடானது. தொடர்ந்து விமான, கோபுர கலசங்களுக்கு காலை 10:10 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ