மேலும் செய்திகள்
பொன்முடியுடன் குன்றக்குடி அடிகளார் சந்திப்பு
03-Oct-2024
காரைக்குடி: குன்றக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக, தானே கொலு அமைத்து வருவதோடு குன்றக்குடி கோயிலை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார். குன்றக்குடியைச் சேர்ந்தவர் சிங்காரவடிவேல் மகன் இளம்பரிதி 17. குன்றக்குடி தருமை கயிலை குருமணி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.குன்றக்குடி அடிகள் உதவியாளரான சிங்காரவடிவேல் தனது மகனை கோயிலுக்கு அடிக்கடி அழைத்துச் சென்றதில் அங்குள்ள சிற்பங்கள், சிலைகள் மீது 10 வயதில் இருந்தே இந்த சிறுவனுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.அதன் வெளிப்பாடாக சிமென்ட், களிமண் விநாயகர் சிலை, சிவன் சிலை உட்பட பல்வேறு சிலைகளை செய்யத் தொடங்கினார். தொடர்ந்து, ஆறாம் வகுப்பு படிக்கும் போது செய்த பொம்மைகளை வைத்து கொலு உருவாக்கினார். தற்போது குன்றக்குடி கோவில் அடிவாரத்தில் இருந்து மலை கோபுரம் வரை தத்ரூபமாக செய்து கொலு வைத்து அசத்தியுள்ளார்.இளம்பரிதி கூறுகையில்: கோயில்களுக்கு செல்லும் போது சிலைகளை பார்த்து அதை செய்ய வேண்டும் என்று ஆசை தோன்றியது. முதன்முதலில் விநாயகர் சிலை செய்யத் தொடங்கினேன். தொடர்ந்து முருகர், சிவன் சிலை, அம்மன் சிலை உட்பட பல்வேறு பொம்மை சிலைகளை உருவாக்கினேன்.எனது தந்தை எனது ஆர்வத்தை புரிந்து எனக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கித் தருவார்.அட்டைப்பெட்டியில் வைத்து விளையாட்டாக கொலு பொம்மை அமைத்தேன். தற்போது பெரிய அளவில் எனது வீட்டிலேயே கொலு அமைத்துள்ளோம் என்றார்.
03-Oct-2024