குன்றக்குடி அடிகளார் நுாற்றாண்டு விழா
தேவகோட்டை : தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க தேவகோட்டை கிளை சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா கிளை தலைவர் போஸ் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் புரட்சி தம்பி முன்னிலை வகித்தனர். செயலாளர் ஞானசுப தர்ஷினி வரவேற்றார்.மாவட்ட செயலாளர் அன்பரசன் தொடங்கி வைத்தார். மாநில துணை தலைவர் கவிஞர் நந்தலாலா அடிகளாரின் தமிழ் தொண்டு, சமுதாய பணி குறித்து பேசினார். மாவட்ட தலைவர் தங்க முனியாண்டி, வக்கீல் ஜயஹரிபிரசாத், பேசினர். ஜீவானந்தம், ரெக்ஸ் கிராமிய பாடல் பாடினர். பல அமைப்புக்களை சேர்ந்த நிர்வாகிகள், மாணவர்கள் பங்கேற்றனர். கிளை பொருளாளர் வக்கீல் மரிய ஜெயபால் நன்றி கூறினார்.