உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரத்து செய்த பட்டா மீண்டும் கிடைக்குமா; கிராம மக்கள் வீடு இல்லாமல் தவிப்பு

ரத்து செய்த பட்டா மீண்டும் கிடைக்குமா; கிராம மக்கள் வீடு இல்லாமல் தவிப்பு

இளையான்குடி தாலுகா விற்கு உட்பட்ட அண்டக்குடி குரூப் தறிக்கொம்பன் கிராமத்தில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 26 நபர்களுக்கு 1994ம் ஆண்டு இளையான்குடி, சாலைக்கிராமம் ரோட்டை ஒட்டி 86 சென்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தி மேற் கண்டவர்களுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியது. 5 பேர் தவிர மற்றவர் களின் வீட்டுமனை பட்டாக்கள் சில மாதங் களிலேயே ரத்து செய்யப் பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் 5 பேருக்கும் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவையும் கடந்த வருடம் பல்வேறு காரணங்களை கூறி ரத்து செய்துள்ளதால் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் குடிசை கூட போட முடியாமல் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தறிக்கொம்பன் கிராமத்தைச் சேர்ந்த முத்து இருளன் மகன் ஜெயபால் கூறியதாவது: தமிழக அரசு மிகவும் கஷ்டப்பட்டு வரும் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு எங் களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை நாங்கள் ஏற்கனவே வீடு மற்றும் வசதியாக வாழ்வதாகவும், தற்போது இந்த ஊரில் இல்லை என்பது போன்ற பல்வேறு காரணங் களை கூறி புகார் வந்ததாக கூறி ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். நாங்கள் குடியிருக்க இடம் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். தற்போது எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து யாருக்கும் பயன் இல்லாமலும், போக்கு வரத்திற்கு இடைஞ்சலாகவும் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் தங்குவதற்கு இடமில்லாமல் கஷ்டப்பட்டு வரும் எங்களுக்கு ரத்து செய்யப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ