உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி, மானாமதுரையில் பத்திரம்தட்டுப்பாடு: இ ஸ்டாம்ப் பயன்படுத்த மக்கள் தயக்கம்

இளையான்குடி, மானாமதுரையில் பத்திரம்தட்டுப்பாடு: இ ஸ்டாம்ப் பயன்படுத்த மக்கள் தயக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் சிவகங்கை, திருப்புத்துார் உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் மக்கள் கடன் வாங்குதல்,மின் வாரியத்தில் பெயர் மாற்றுதல், காஸ் இணைப்பு மற்றும் பெயர் மாற்றுதல், நகை அடகு வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக குறைந்த மதிப்பு கொண்ட ரூ.50, 100 பத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே ரூ.10, 20 பத்திரங்கள் நடைமுறையில் இல்லாமல் போனதை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ரூ.50, 100 பத்திரங்களை பயன்படுத்தினர். இந்நிலையில் தற்போது அந்த பத்திரங்களுக்கும்தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளதால் ரூ.500,1000 பத்திரங்களை பயன்படுத்தி வந்தனர். கடந்த சில வாரங்களாக அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பத்திரங்கள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து முத்திரைத்தாள் விற்பனை செய்பவர்கள் கூறியதாவது:மக்கள் தினந்தோறும் பல்வேறு பணிகளுக்காக பத்திரம் பயன்படுத்தி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாகவே மதிப்பு குறைவான பத்திரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பத்திரங்களை வாங்க அரசு முத்திரைத்தாள் விற்பனை ஆன்லைனில் பதிவு செய்ய முயன்றால் அதில் பத்திரங்கள் இருப்பு இல்லை என வருவதால் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் கூறினால் அவர்கள் இ ஸ்டாம்ப் பத்திரங்களை பயன்படுத்துமாறு கூறுகின்றனர். ஆனால் கிராமப்பகுதிகளிலிருந்து வரும் மக்கள் இ ஸ்டாம்ப் பத்திரங்களை பயன்படுத்த சிரமப்பட்டு வருவதாக கூறினர்.கருவூல அதிகாரி கூறியதாவது: குறைந்த மதிப்பு கொண்ட பத்திரங்கள் குறைந்த அளவே வருவதால் இருக்கின்ற பத்திரங்களை ஆன்லைனில் முன் பதிவு செய்த முத்திரைத்தாள் விற்பனை செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொடுத்து வருகிறோம் என்றும் தட்டுப்பாடு குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துஉள்ளோம். விரைவில் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ