உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழை பற்றாக்குறை விதைப்பு தாமதம்: விதை இருப்பில் ஆர்வம்

மழை பற்றாக்குறை விதைப்பு தாமதம்: விதை இருப்பில் ஆர்வம்

திருப்புத்துார் : திருப்புத்துாரில் போதிய மழை இல்லாமல் நெல் விதைப்பு தாமதமானாலும் விவசாயிகள் நம்பிக்கையுடன் நெல் விதைகளை வாங்கி இருப்பு வைத்துள்ளனர். திருப்புத்துார் வட்டாரத்தில் வழக்கமாக புரட்டாசியில் நெல் விதைப்பு முடிந்து நாற்று நடவும் முடிந்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு பரவலாக மழை பெய்தாலும் திருப்புத்துார் வட்டாரத்தில் ஓரளவே மழை பெய்துள்ளது. அடுத்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நிலங்களை உழுது தயாராக வைத்துள்ளனர். திருப்புத்துார் வேளாண்துறை அலுவலகத்தில் மட்டும் 3 டன் நெல் விதைகள் விற்பனையாகியுள்ளது. தனியாரிடமும் இதே போன்று விதைகள் வாங்கியுள்ளனர். இதனால் அடுத்து மழை பெய்தவுடன் விவசாயிகள் மும்முரமாக நெல்சாகுபடியில் இறங்குவார்கள் என்று வேளாண் துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிணறு, போர்வெல் உள்ளவர்கள் மட்டும் சிறிய அளவில் விதைப்பு, நடவு செய்துள்ளனர். தாமதமான சாகுபடியால் மார்ச்சில் நெல்அறுவடை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி