பிரத்யங்கிரா தேவி கோயிலில் லட்சுமி ஹயக்ரீவர் பூஜை
சிவகங்கை; சிவகங்கை அருகே கே.சொக்கநாதபுரம் பிரத்யங்கிரா தேவி கோயிலில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான லட்சுமி ஹயக்ரீவர் பூஜை நடந்தது.தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் நடந்த பூஜைக்கு சாத்தஐயப்ப சுவாமி தலைமை வகித்தார். யாகத்தினை சிவாச்சாரியார்கள் சிவக்குமார், விக்னேஷ் உள்ளிட்டோர் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார், கிளை தலைவர் முத்து வடுகநாதன் முன்னிலையில் சங்க 45 ம் ஆண்டு துவக்க நாள் விழா நடந்தது. மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பூஜிக்கப்பட்ட சுவாமி படம், பிரசாதம் வழங்கப்பட்டது.பட்டமங்கலம் சிவாச்சாரியார் தண்டபாணி வாழ்த்தி பேசினார். சங்க மாவட்ட செயலாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னாள் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சந்திரா நன்றி கூறினார்.