உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எஸ்.பி., அலுவலகத்திற்கு சட்ட அலுவலர்

எஸ்.பி., அலுவலகத்திற்கு சட்ட அலுவலர்

சிவகங்கை: சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சட்ட அலுவலராக நியமிக்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டத்துடன், பி.எல்., மற்றும் ஒருங்கிணைந்த சட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவு செய்து, குறைந்தது 5 ஆண்டுகள் உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள், நீதித்துறை நடுவர் மன்றங்களில் சேவை செய்திருக்க வேண்டும். குற்றவழக்கு இருக்க கூடாது.ஒரு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கப்படும். பின்னர் ஆண்டு தோறும் புதுப்பிக்கப்படும். பணியில் திருப்தி இல்லாவிடில் ஒப்பந்தத்தை ரத்து செய்ய எஸ்.பி.,க்கு அதிகாரம் உண்டு. தேர்வு செய்யப்படுவோர் எஸ்.பி.,க்கு சட்டம், குற்றவியல் வழக்கு சார்ந்த ஆலோசனை வழங்க வேண்டும். சட்ட ஆலோசகருக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியம். விண்ணப்பத்துடன் உரிய சான்றினை, நேரடியாக எஸ்.பி., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி