உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொழு நோய் கண்டறியும் முகாம்

தொழு நோய் கண்டறியும் முகாம்

காரைக்குடி: சாக்கோட்டை வட் டாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் தொழுநோய் கண்டு பிடிப்பு பணி வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தராஜ் தலைமையில் நடந்து வருகிறது. வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் மாரிக்குமார் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள், உமையாள் ராமநாதன் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவிகள், அழகப்பா நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுவயல், பீர்க்கலைக்காடு, கோட்டையூர், ஓ.சிறுவயல், சங்கராபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், வீடு வீடாக சென்று தொழுநோய் கண்டறியும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ