மது விற்றவர் கைது
சிவகங்கை : எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாகனேரியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்குள்ள பூக்காட்டு கண்மாய் கரையில் நின்ற முத்தன் மகன் பழனிக்குமாரை 36 விசாரித்தனர். அவர் மது விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.