லாக்கப் மரணம் கண்காணிக்க குழு
திருப்புவனம் : திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்திற்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா அன்ட் குளோபல் அமைப்பின் மாநில தலைவர் பிச்சைவேல் தலைமையில் மாநில சட்ட ஆலோசகர் முருகன், மாநில பார்வையாளர் ராமன், பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரி, மதுரை மாவட்ட தலைவர் முருகேச பாண்டி, பொதுச் செயலாளர் விவேகானந்தன் உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.பிச்சைவேல் கூறுகையில்: விசாரணை என்ற பெயரில் அப்பாவி இளைஞரை அடித்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் போலீஸ் விசாரணை என்ற பெயரில் அப்பாவிகள் உயிரிழப்பதை தடுக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும், இதன் மூலம் அரசுக்கு நெருக்கடி ஏற்படுவதை தடுக்க முடியும். அஜித்குமார் வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், என்றார்.