உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காதல் பிரச்னை ஒருவருக்கு வெட்டு

காதல் பிரச்னை ஒருவருக்கு வெட்டு

மானாமதுரை: மானாமதுரை அருகே ஆலம்பச்சேரி முத்துக்குமார் மகன் லோகேஸ்வரன் 24. இவர் மானாமதுரை அருகே ஆதனூரில் வசிக்கிறார். இவரும் கிளங்காட்டூர் பாலா. இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்துள்ளனர். இதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால், கிழங்காட்டூரை சேர்ந்த அழகர் மகன் வினோத் இருதரப்பினரிடமும் பஞ்சாயத்து செய்துள்ளார். இதில் இருதரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆதனுார் லோகேஸ்வரன், கவுதம் ஆகியோர் நின்றிருந்த போது, அங்கு வந்த கிழங்காட்டூர் அழகர் மகன் வினோத் 23, ரமேஷ் மகன் பிரதாப் 24, முனியாண்டி மகன் ராஜேஷ் 24, முருகன் மகன் இந்துராஜா 26 ஆகிய 4 பேர்களும் லோகேஸ்வரனை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமுற்ற அவரை மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மானாமதுரை போலீசார் 4 பேர்களையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை