வீராணியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள்
சிவகங்கை: சிவகங்கை அருகே வீராணி கிராமத்தில் ரோட்டின் நடுவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளுக்கு மரக்கம்பால் விவசாயிகள் முட்டுக்கொடுத்துள்ளனர். சிவகங்கை அருகே வீராணியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அல்லுார் ரோட்டில் இருந்து வீராணி செல்லும் ரோட்டின் குறுக்கே தாழ்வாக மின்கம்பிகள் செல்கிறது. இதனால் வாகனங்கள் கிராமத்திற்குள் வரமுடியாத சூழல் உள்ளது. பலத்த காற்று அடித்தாலே மின் கம்பம் அறுந்து விழுந்து விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. தற்போது விவசாயிகளே கம்புகளால் மின்கம்பிகளை முட்டுக்கொடுத்துள்ளனர்.