உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்சன யாகம்

ஆஞ்சநேயர் கோயிலில் மகா சுதர்சன யாகம்

கீழச்சிவல்பட்டி : திருப்புத்தூர் அருகே ஆவிணிப்பட்டி பக்த ஜெயங்கொண்ட ஆஞ்சநேயர் கோயிலில் சுதர்சன மகாயாக லட்சார்ச்சனை பூஜைகள் நடந்தது. இங்கு நேற்று காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை, கோ பூஜைகள் நடந்தது. சுதர்சனஜெபம், ஆஞ்சநேயர் மூலமந்திர ஜெபம் நடந்தது. 151 கலசங்கள் பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. யாகசாலையில் வஸ்திர, புஷ்பயாகம், பழங்கள், நெய் உள்ளிட்ட பொருட்களிட்டு பூர்ணாஹூதி நடந்தது. கலச புறப்பாடுடன் மூலவர், உற்ஸவருக்கு அபிேஷகம் செய்தனர். அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை நடந்தது. இரவில் உற்ஸவர் திருவீதி உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ