புதுவயல் பிள்ளையார்குளத்தில் பராமரிப்பு பணி துவங்கியது
காரைக்குடி: புதுவயல் பேரூராட்சியில், அக்னி பிள்ளையார் குளம் பராமரிப்பின்றி கிடப்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அவசர அவசரமாக பரா மரிப்பு பணி நடந்து வருகிறது. புதுவயல் பேரூராட்சியிலுள்ள 15வது வார்டில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ் அக்னி பிள்ளையார் குளம் சீரமைப்பு பணி 2022 ஆம் ஆண்டு தொடங்கியது. ரூ. 1.77 கோடி மதிப்பீட்டில் குளம் சீரமைப்பு பணி நடந்தது. குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லை. தவிர, குளத்தில் கருவேல மரங்கள் நிறைந்து, பராமரிப்பின்றி கிடக்கிறது. பராமரிப்பின்றி அரசின் பணம் வீணடிக்கப்படுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து நேற்று 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூலம் கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்தது.