ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜை
மானாமதுரை; மானாமதுரை தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மகரஜோதி பூஜை நடைபெற்றது. மானாமதுரை தெற்குரதவீதியில் உள்ள இக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை துவக்கி, சபரிமலைக்கு சென்று வந்ததும் விரதத்தை முடிக்கின்றனர். நேற்று மகரஜோதியை முன்னிட்டு சுவாமிக்கு 18 வகை திரவிய அபிேஷகம் செய்தனர். திருமஞ்சனம், அபிேஷக ஆராதனைகள் நடந்தது. வெள்ளிக்கவசத்தில் ஐயப்பன் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.