மானாமதுரை அருகே வீட்டில் 11 பவுன் நகை திருடியவர் கைது
சிவகங்கை : மானாமதுரை மேலபசலையைச் சேர்ந்தவர்அய்யனார். இவரது வீட்டில் 2023 நவ.25 தேதி 11 பவுன் தங்க நகை திருடுபோனது. அய்யனார் மானாமதுரை போலீசில் புகார் அளித்தார். எஸ்.பி., ஆஷிஷ் ராவத் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், எஸ்.ஐ., அகிலன் தலைமையில் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட பாண்டியராஜன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 8 அரை பவுன் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பாண்டியராஜன் அய்யனார் வீட்டின் அருகில் வசித்து வருகிறார்.