உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இருளில் மானாமதுரை மேம்பாலம் கூசும் விளக்கால் விபத்து தொடர்கிறது

இருளில் மானாமதுரை மேம்பாலம் கூசும் விளக்கால் விபத்து தொடர்கிறது

மானாமதுரை: மானாமதுரையில் நகருக்குள் செல்லும் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தில் விளக்குகள் இல்லை. பாலத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் நான்கு வழிச்சாலை மானாமதுரை நகரப்பகுதி வழியாக செல்கிறது.தல்லாகுளம் முனியாண்டி கோயில் அருகே ஆரம்பமாகும் மேம்பாலம் மானாமதுரை பஸ் ஸ்டாண்ட் அருகே முடிகிறது.இந்த மேம்பாலத்தில் விளக்குகள் இல்லாத காரணத்தினாலும்,சென்டர் மீடியனில் விளக்குகளின் ஒளியை மறைக்கும் செடிகள் இல்லாத காரணத்தினாலும் இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பில் கூசும் அளவிற்கு விளக்குகளை எரியவிட்டு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது மேம்பாலத்தில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த பாலத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்படவில்லை.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது; முன்பு அமைக்கப்பட்ட பாலத்தில் விளக்குகள் அமைப்பதில்லை. ஆனால் தற்போது கட்டப்படும் பாலங்களில் விளக்குகள் அமைக்கப்படுகிறது. மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து ஏற்கப்பட்டால் மானாமதுரை பாலத்திலும் விளக்குகள் பொருத்தப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை