உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கருவேல மரங்களால் அவதி

மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கருவேல மரங்களால் அவதி

மானாமதுரை : மானாமதுரையில் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோட்டை மறைக்கும் அளவிற்கு கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுவதால் அவ்வழியாகச் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மதுரை, விருதுநகர், ராமேஸ்வரம் சென்னை ஆகிய பகுதிக்கு ரயில்கள் சென்று வருகின்றன. மானாமதுரை அருகே உள்ள இளையான்குடி, வீரசோழன், நரிக்குடி, பார்த்திபனூர், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த ஏராளமான பயணிகள் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.இவர்கள் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் ரோடு வழியாக ஸ்டேஷனுக்கு செல்கின்ற நிலையில் அந்த ரோட்டில் கருவேல மரங்கள் வளர்ந்தும், இரவு நேரங்களில் அப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாத காரணத்தினால் இருட்டுக்குள் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சில நேரங்களில் திருட்டு சம்பவங்களும் நடைபெற்று வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.ரயில்வே நிர்வாகத்தினர் உடனடியாக இந்த ரோட்டில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ