மண்டலாபிஷேகம்
தேவகோட்டை; தேவகோட்டை ஷீரடி சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள சொர்ண விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் சாய்பாபா, சொர்ண விநாயகருக்கு மண்டல பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் ஹோமங்கள் நடத்தினர். மாலையில் சாய்பாபா தங்கரதத்தில் வீற்றிருக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோயில் நிறுவனர் முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் குடும்பத்தினர் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.