மேலும் செய்திகள்
பவுர்ணமி பூஜை
11-Jul-2025
இளையான்குடி : இளையான்குடி அருகே முட்டகுறிச்சி பத்ரகாளி அம்மன் கோயில் மண்டலாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலில் 48 நாட்களுக்கு முன் கும்பாபிேஷகம் நடந்தது. இதனை தொடர்ந்து தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று மண்டலாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், நெய், இளநீர், தயிர், திரவியம் குங்குமம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. கோயில் முன்பாக புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து ஹோமங்கள் வளர்க்கப்பட்ட பின்னர் புனித நீரால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். விழாக்குழுவினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.
11-Jul-2025