பூமாயி அம்மன் கோயில் மண்டலாபிஷேகம்
திருப்புத்தூர் : திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் மே 26ல் மண்டலாபிஷேகம் நிறைவு பெறுகிறது.இக்கோயிலில் ஏப்.11ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினசரி மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து வருகிறது. 45ம் நாளான மே 26ல் மண்டலாபிஷேகம் நிறைவடைகிறது.அன்றைய தினம் காலை 9:05 மணிக்கு மண்டலாபிஷேக பூஜைகள் துவங்குகின்றன. பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் சிறப்பு யாகத்தில் பங்கேற்கின்றனர். பின்னர் மதியம் 12:05 மணிக்கு மூலவர் அம்மனுக்கு தீபாராதனை நடைபெறும்.