உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் மாங்காய் விற்பனை: கிலோ 100 ரூபாய்

திருப்புவனத்தில் மாங்காய் விற்பனை: கிலோ 100 ரூபாய்

திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் குளிர்காலமான தற்போதும் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் சேலம், நத்தம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மா மரங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து தமிழகம் முழுவதும் மாங்காய், மாம்பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. டிசம்பர், ஜனவரியில் பூ பூத்து மார்ச்சில் காய்க்க தொடங்கும், ஜூன், ஜூலை வரை மாம்பழங்கள், காய்கள் விற்பனை இருக்கும். விளைச்சலை பொறுத்து கிலோ 60 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும், மார்ச் முதல் ஜூன் வரை தான் சீசன். அதன்பின் மாங்காய், பழங்கள் விற்பனையாகாது. ஒருசில இடங்களில் குறைந்த அளவே மாங்காய் விற்பனைக்கு வரும். தற்போது திருப்புவனம் வட்டாரத்தில் மாங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நத்தம் பகுதியில் இருந்து கல்லாமை எனப்படும் கிரேப் ரக மாங்காய்கள். கிலோ நுாறு ரூபாய் என விற்பனை செய்யப் படுகின்றன. வியாபாரிகள் கூறுகையில்: நத்தம் பகுதியில் பம்ப்செட் மூலம் மாந்தோப்புகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகின்றன. தற்போது ஓரளவிற்கு கிரேப் ரக மாங்காய்கள் விளைச்சல் கண்டுள்ளன. அவற்றை வாங்கி விற்பனை செய்கிறோம் நாள் ஒன்றுக்கு 100 கிலோ வரை விற்பனை யாகும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை