சூராணத்தில் மாரத்தான் போட்டி
இளையான்குடி, : இளையான்குடி அருகே சூராணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாரத்தான் ஓட்ட போட்டி நடந்தது.மாநில பொறுப்பாளர் தங்கராசு, ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் துவக்கி வைத்தனர். ஆண்கள், பெண்கள் என இரு பிரிவாக போட்டி நடந்தது. 10 கி.மீ.,துார ஆண்கள் பிரிவில் காஞ்சிபுரம் சுகுமார் முதலிடம், ரூ.10,000 பரிசு தொகை பெற்றனர். 2 ம் பரிசு தமிழ்செல்வன், 3 ம் பரிசு குமரகுரு பெற்றனர்.பெண்களுக்கான 8.கி.மீ., துார போட்டியில் காஞ்சிபுரம் யாஸ்மிகா முதலிடம், 2 ம் பரிசு வினிதா, 3ம் பரிசு பிரியதர்ஷினி பெற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு கேடயம், பாராட்டு சான்று வழங்கப்பட்டன. ஏற்பாட்டை சூராணத்தை சேர்ந்த ஜீவா தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.