உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் ரோட்டில் மீண்டும் சந்தை: போக்குவரத்து பாதிப்பு

திருப்புவனம் ரோட்டில் மீண்டும் சந்தை: போக்குவரத்து பாதிப்பு

திருப்புவனம்: திருப்புவனத்தில் வியாபாரிகள் மீண்டும் மீண்டும் ரோட்டிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம், திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும இந்த சந்தையில் தான் அனைத்து பொருட்களையும் வாங்கிச் செல்வது வழக்கம், இதனால் மற்ற ஊர் சந்தைகளை விட திருப்புவனம் சந்தையில் 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், கீரை வகைகள் விற்பனை செய்வர்.வாரச்சந்தையில் போதிய இடம் இருந்தாலும் ரோட்டிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்தும் நேரிட்டு வந்தன. பலமுறை இதுகுறித்து நாளிதழ்களில் சுட்டி காட்டியபின் போலீசாரும் பேரூராட்சி நிர்வாகமும் கடந்த நான்கு வாரங்களாக ரோட்டில் கடைகள் அமைப்பதை தடுத்து சந்தையினுள் கடை அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.பழநி தைப்பூச திருவிழாவை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக பழநிக்கு அனுப்பப்பட்டு விட்டனர். போதிய போலீசார் இல்லாததால் நேற்று முன் தினம் வாரச்சந்தைக்கு வந்த வியாபாரிகள் சிவகங்கை ரோட்டில் தொடங்கி தனியார் பள்ளி வரை வரிசையாக இடைவெளி இன்றி கடைகள் அமைத்து விட்டனர்.பொதுமக்களும் ரோட்டிலேயே நின்று பொருட்கள் வாங்கியதால் எந்த ஒரு வாகனமும் நகர்ப்பகுதிக்குள் செல்ல முடியவில்லை. தொலை தூர பேருந்துகள் பலவும் பயணிகளை பைபாஸ் ரோட்டிலேயே இறக்கி விட்டு சென்றதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை