உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை

காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை

சிவகங்கை: காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் ஏராளமான அரசியல் பிரமுகர்கள், அமைப்பினர் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.மருதுபாண்டியர் நினைவிடத்தில், அறக்கட்டளை சார்பில் தலைவர் நாகராஜன் தலைமையில் பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். பா.ஜ., சார்பில் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில செயலாளர் புரட்சி கவிதாசன், மாவட்ட தலைவர் சத்தியநாதன், துணை தலைவர் சுகனேஸ்வரி, தேசிய பொதுகுழு சொக்கலிங்கம், ஒன்றிய தலைவர்கள் மயில்சாமி, பில்லப்பன், காங்., மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, சிவகங்கை நகர் தலைவர் விஜயகுமார், தி.மு.க., முன்னாள் எம்.பி., பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்சா முத்துராமலிங்கம், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியசாமி, கிருஷ்ணகுமார், சிவகங்கை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க.,வில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் சிவாஜி, பழனிசாமி, அருள்ஸ்டீபன், கோபி, செல்வமணி, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், சிவகங்கை நகர் செயலாளர் ராஜா, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், மாவட்ட செயலாளர் அசோகன், தே.மு.தி.க., மாவட்ட தலைவர் திருவேங்கடம், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் பாண்டி, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், மதுரை ஆதினம், ராமநாதபுரம் அரண்மனை நாகேந்திர சேதுபதி, ஆதித்ய சேதுபதி உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். சிவகங்கை எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் 1704 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
அக் 28, 2024 08:58

மருது பாண்டியர்களுக்கு அரசியல் தலைவர்கள் செய்திடும் மரியாதை லாபத்தை எதிர்பார்த்து.. திருக்கோயில்களில் அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் நின்று பிராத்தனை செய்கிறார்கள். அவர்களுக்கு அர்ச்சகர்கள் உரிய மரியாதைகள் செய்கின்றனர். ஆனால் எந்த நோக்கமும் பலனை வேண்டாமல் வரும் பக்தர்கள் ஆண்டவன் திருவடியை கூட பார்க்கவிடாமல் விரட்டப்படுகிறார்கள். பசை உள்ள திருக்கோயில்களுக்கு கொடுக்கும் காணிக்கையைவிட பாடல்பெற்ற திருக்கோயில்களை சுற்றியுள்ள சிறிய கோயில்களுக்கு செய்வதுதான் உண்மையான பூஜை


சமீபத்திய செய்தி