உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவ மலர் கட்டுரை (2) சர்க்கரை நோயாளிகள் பாத நரம்பு; பரிசோதனை செய்ய வேண்டும் * டாக்டர் தங்கத்துரை பேட்டி

மருத்துவ மலர் கட்டுரை (2) சர்க்கரை நோயாளிகள் பாத நரம்பு; பரிசோதனை செய்ய வேண்டும் * டாக்டர் தங்கத்துரை பேட்டி

சிவகங்கை:: சர்க்கரை நோயாளிகள் பாத நரம்பு, இ.சி.ஜி., கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என சிவகங்கை ஜாய் கிளினிக் டாக்டர் தங்கத்துரை தெரிவித்தார். அவர் கூறியதாவது, சிவகங்கை சிவன் கோவில் எதிரில் உழவர் சந்தை அருகில் ஜாய் கிளினிக் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தான் முதன் முறையாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு புண் வந்தால் அவர்களுக்கு எந்த விதமான அறுவை சிகிச்சை, வலியின்றி (Vacuum Therapy) வெற்றிட சிகிச்சை பம்பு மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் முக்கியத்துவம் கொடுத்து 30 நாட்களுக்கு ஒரு முறை சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை பாத நரம்பு, 6 மாதங்களுக்கு ஒரு முறை இ.சி.ஜி., கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்வது அவசியம். இந்த பரிசோதனை செய்யாவிடில் கண், நரம்பு, சிறுநீரகம் பாதிக்கும், கால்வலியும் ஏற்படும். இந்த கிளினிக்கில் படுக்கை அறை, இ.சி.ஜி., லேப், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தமுறையில் பரிசோதனை, ஆலோசனை வழங்கப்படும். சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் எங்கள் மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை பெறலாம். உணவு கட்டுபாடு, உடற்பயிற்சி, மற்றும் மருந்துகளின் மூலம் சர்க்கரையின் அளவை இயல்பான நிலைக்கு கொண்டு வரலாம். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ சேவை புரிந்து வருகிறோம், என்றார். சிகிச்சைக்கு முன்பதிவு செய்ய 96003 56503 அழைக்கலாம். .////


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை