உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அருளானந்தபுரம் சர்ச் விழாவிற்கு குடங்களை சுமந்து வந்த ஆண்கள்

அருளானந்தபுரம் சர்ச் விழாவிற்கு குடங்களை சுமந்து வந்த ஆண்கள்

மானாமதுரை; இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் சர்ச் பங்கைச் சேர்ந்த அருளானந்தபுரம் புனித அன்னம்மாள் சர்ச் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவின் நிறைவாக வருடம் தோறும் சர்ச் வளாகத்தில் அன்னதான விழா நடைபெறும். இங்கு சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டுமே அருகில் உள்ள ஆற்றிலிருந்து குடங்களில் கொண்டு வந்து கொடுக்கின்றனர். பாதிரியார்கள் ஜான் வசந்தகுமார், பிரின்ஸ், தாமஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர். தொழிலதிபர் சுந்தர்ராஜன் தண்ணீர் குடத்தை சுமந்து வந்த ஆண்களுக்கு ஆடை வழங்கினார். ஏற்பாடுகளை புனித அன்னாள் மைந்தர்கள் சங்கம், புனித அன்னை தெரசா இளையோர் இயக்கம்,அருளானந்தபுரம் பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை