உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் பால் விலை உயர்வு

திருப்புவனத்தில் பால் விலை உயர்வு

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று முதல் பால் விலை உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர். தமிழகம் முழுவதும் கடந்தாண்டு டிசம்பரில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 35 ரூபாயில் இருந்து 38 ரூபாயாக உயர்த்தப்பட்டதால் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டது. ஆனால் கிராமப்புறங்களில் பழைய விலைக்கே பால் விற்பனை செய்யப்பட்டது. நேற்று திடீரென திருப்புவனம் பகுதி கூட்டுறவு சங்கங்களில் பால் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான பெத்தானேந்தல், மணல்மேடு, வில்லியரேந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கறவை மாடு வைத்திருப்பவர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு பாலை விற்பனைக்கு அனுப்புகின்றனர். திருப்புவனத்தில் இருந்து தினசரி காரைக்குடி ஆவின் நிறுவனத்திற்கு மூவாயிரம் லிட்டர் பால் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதுபோக திருப்புவனம் கோட்டை, புதுார், உள்ளிட்ட பகுதிகளில் சில்லறையாகவும் பால் விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு மூவாயிரத்து 500 லிட்டர் பால் விற்பனை செய்யப்படும் நிலையில் நேற்று முதல் திடீரென ஒரு லிட்டர் பால் 44 ரூபாயில் இருந்து 48 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.கூட்டுறவு சங்க அலுவலர்கள் கூறுகையில் : பால் விற்பனை விலையை உயர்த்த கோரி நேற்று முன் தினம் தான் உத்தரவு வந்ததால் விலை உயர்த்தப்பட்டது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ