உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்லுாரி விடுதிகளில் ‛சிசி டிவி கேமரா மூலம் கண்காணிப்பு * அமைச்சர் மெய்யநாதன் தகவல்

கல்லுாரி விடுதிகளில் ‛சிசி டிவி கேமரா மூலம் கண்காணிப்பு * அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சிவகங்கை:''அனைத்து கல்லுாரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் ரூ.10.59 கோடியில் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது,'' என, சிவகங்கையில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது: உயர்கல்வித்துறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 40 அரசு கலை கல்லுாரிகளை முதல்வர் ஸ்டாலின் துவக்கியுள்ளார். கல்லுாரிகளில் சேரும் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிக்க 36 கல்லுாரி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. எந்த கல்லுாரி விடுதியிலும் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறையவே இல்லை. மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் மூலம் மத்திய, மாநில அரசு நிதியில் கடந்த 4 ஆண்டில் மட்டுமே 39 லட்சத்து 86 ஆயிரத்து 642 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1,242 கோடியில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை முறையாக மாணவர்களின் வங்கி கணக்கிற்கு செல்கிறதா என தலைமை அலுவலகத்தில் கண்காணிக்கப்படுகிறது.கல்லுாரி விடுதி மாணவ, மாணவிகளுக்கு ஏ.ஐ.,தொழில்நுட்ப கல்வி பயில்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நுாலகத்தில் கம்ப்யூட்டர்கள் பொருத்தி, இணையதளம் மூலம் அனைத்து நுால்களையும் எடுத்து படிக்க வசதிகள் செய்துள்ளோம். இதற்காக ‛வைபை' வசதியுடன் இணையதள இணைப்பு தந்துள்ளோம். விளையாட்டு உபகரணங்களும் விடுதிக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை