உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் மருதுபாண்டியர் சிலைகளுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

திருப்புத்துாரில் மருதுபாண்டியர் சிலைகளுக்கு அமைச்சர்கள் அஞ்சலி

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் உள்ள மருதுபாண்டியர் நினைவு மணி மண்டபத்தில் மருதுபாண்டியர் 224வது நினைவு நாளையொட்டி அமைச்சர்கள் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர். பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள நினைவுத் துாணுக்கும் பலர் அஞ்சலி செலுத்தினர். நேற்று காலை மணி மண்டபம் முன் வாரிசுதாரர் ராமசாமி தலைமையில் பொங்கலிட்டு பூஜை நடந்தது. கலெக்டர் பொற்கொடி தேசியக் கொடியேற்றி அஞ்சலி நிகழ்ச்சியை துவக்கினார். மதுரை ஆதினம் மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர்கள் பெரியசாமி, பெரிய கருப்பன், தியாகராஜன், ராஜகண்ணப்பன், மெய்யநாதன், ராஜா, எம்.எல்.ஏ. தமிழரசி, பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி மருதுபாண்டியர் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க., தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஸ்வநாதன் உதயகுமார், செல்லுார் ராஜூ, விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், காமராஜ், கோகுல இந்திரா, மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சரவணன், எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன், ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் அஞ்சலி செலுத்தினர். பா.ஜ. சார்பில் மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, முன்னாள் மாவட்டத் தலைவர் சத்தியநாதன் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் சேது சிவராமன், காங். சார்பில் எம்.எல்.ஏ. மாங்குடி,முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி மாநில துணை பொதுச் செயலர் சுந்தரராஜன், மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, அ.ம.மு.க.சார்பில் பொதுச் செயலாளர் தினகரன், மாவட்டச் செயலர் தேர்போகி பாண்டியன் ம.தி.மு.க., தரப்பில் பொதுச்செயலாளர் வைகோ, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர். பாலுச்சாமி, ம.தி.மு.க., விலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, பாண்டியராஜன் ஆகியோரும், அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் மாவட்டத் தலைவர் ஹைதர் அலி அம்பலம்,லெனின் கம்யூ. பொதுச் செயலர் ஸ்டாலின் வர்த்தக சங்கம், ஆறுமுகநகர் லயன்ஸ் கிளப் உள்ளிட்ட பல அமைப்புகள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை