உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இணைந்து பணி செய்தால் வெற்றி தி.மு.க.,வினரிடம் அமைச்சர் பேச்சு

இணைந்து பணி செய்தால் வெற்றி தி.மு.க.,வினரிடம் அமைச்சர் பேச்சு

திருப்புத்துார்: திருப்புத்துாரில் தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட அவைத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் வரவேற்றார். தி.மு.க., மண்டல பொறுப்பாளரும்,அமைச்சருமான தங்கம் தென்னரசு பேசியதாவது: 2026 சட்டசபைத் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. அதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் எந்த போர்வையில் வருகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து அதற்கு ஏற்ப திறமையாக செயல்பட வேண்டும்.பகைவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அரசின் நான்கரை ஆண்டு சாதனைகள் வீட்டில் ஒருவருக்கு சென்றடைந்துள்ளது.தேர்தல் பணியில் கூடுதல் பலமாக ஓட்டுச்சாவடியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். கிளை நிர்வாகிகள், பூத் கமிட்டி , சார்பு அணியினர் இணைந்து பணியாற்றினால் தேர்தலில் வெற்றியை எளிதாக பெற முடியும்.இவ்வாறு பேசினார்.முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ