பள்ளியில் மாதிரி ஓட்டு மையம்
காரைக்குடி: புதுவயல் வித்யா கிரி பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாதிரி மையம் அமைத்து மாணவர்கள் ஓட்டு போட்டனர்.முதல்வர் குமார் தலைமையேற்றார். மாணவர்களுக்கு ஓட்டு குறித்தும் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும் பேசினார். தொடர்ந்து வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாணவர்கள் தேர்தல் அலுவலர்கள் போல் இருந்து மாதிரி ஓட்டுப்பதிவை நடத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிவபாக்கியம், அனுராதா, வடிவுக்கரசி செய்திருந்தனர்.