உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்துப்பட்டி ஸ்பைசஸ் பூங்கா: முதலீட்டாளர்கள் அதிருப்தி

முத்துப்பட்டி ஸ்பைசஸ் பூங்கா: முதலீட்டாளர்கள் அதிருப்தி

சிவகங்கை : சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள 'ஸ்பைசஸ் பூங்காவில்'தொழில் துவங்குவோருக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 'ஸ்பைசஸ் வாரியம்' செய்து தராததால், முதலீட்டாளர்கள் தவித்து வருகின்றனர்.சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் 2013ம் ஆண்டு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை சார்பில் 74 ஏக்கரில்ரூ.20 கோடி செலவில், 'ஸ்பைசஸ் பூங்கா' திறக்கப்பட்டது. ஒரு தொழில் முதலீட்டாளருக்கு ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சம் 1.25 ஏக்கர் வரை நிலம் ஒதுக்கீடு செய்து, ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.6 (ஜி.எஸ்.டி., உட்பட) லட்சம் வரை வசூலித்துள்ளனர். 33 தொழில் கூடங்கள் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்தனர். இது வரை இப்பூங்காவில் 20 முதலீட்டாளர்கள் மட்டுமே தொழில் துவங்குவதற்கான இடங்களை பெற்றுள்ளனர். 13 இடங்கள் காலியாகவே உள்ளன.இப்பூங்காவில் இருந்து மிளகாய், மஞ்சள், மல்லி, இஞ்சி, கருவேப்பிலை உள்ளிட்ட வாசனை பொருட்களை நவீன இயந்திரங்கள் மூலம் அரவை செய்து, பேக்கிங் மூலம் மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்யும்நோக்கில் இப்பூங்கா நிறுவப்பட்டுள்ளது. 2013ல் துவங்கிய இப்பூங்காவிற்கு நகர்ஊரமைப்பு துறையினரிடம் அங்கீகாரம் பெறவில்லை. இதனால், புதிதாக தொழில் துவங்க முடியாமல் முதலீட்டாளர்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் ஸ்பைசஸ் வாரியம், கடந்த 2019ல் அங்கீகாரம் பெற்றது. இதையடுத்து தொழில் முதலீட்டாளர்கள் தாங்கள் ஒப்பந்தம் செய்த இடத்தில் தொழிற்கூடங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

அடிப்படைவசதியின்றி அவதி

இதற்கான குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை 'ஸ்பைசஸ் வாரியம்' தான் செய்து தர வேண்டும். ஆனால், எந்த தொழில் கூடங்களுக்கும் தனித்தனியாக மின்சாரம், குடிநீர் குழாய் இணைப்பு வசதிகளை செய்துதரவில்லை. இதனால், தலா ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்த முதலீட்டாளர்கள் தொழில் துவங்கமுடியாமல் தவித்து வருகின்றனர்.

ஆர்வம் காட்டாதமுதலீட்டாளர்கள்

முதலீட்டாளர் கே.அழகுமுத்து கூறியதாவது:உரிய நேரத்தில் அங்கீகாரம் பெறாததால், ஒப்பந்தம் செய்து 6 ஆண்டாக தொழில் துவங்க முடியாத நிலையில், முதலீடு செய்த தொகையால் பாதிக்கப்பட்டோம். தற்போது தொழில் துவங்க வரும் நிலையில், அந்த தொழிற்கூடங்களுக்கென தனித்தனியாக மின், குடிநீர் இணைப்பு வசதிகளை 'ஸ்பைசஸ் வாரியம்' செய்து தர முன்வரவில்லை. இதன் காரணமாக புதிதாக தொழில் துவங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் கட்டவில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ