மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
16 hour(s) ago
பயிற்சி முகாம்
16 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
16 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
16 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
16 hour(s) ago
திருப்புத்துார்: திருப்புத்துார் வழியாகதைப்பூச பயணம் மேற்கொள்ளும் மணச்சை பாளையநாட்டார் காவடிக்குழுவினர் பழநி சென்றனர்.தைப்பூசத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திலிருந்து பலரும் பாதயாத்திரையாக பழநி செல்வது வழக்கம். அதில் பலர் குழுவாக காவடி எடுத்துச் செல்கின்றனர். காரைக்குடி மணச்சை பாளையநாட்டார் காவடி குழுவினர் கடந்த 46 ஆண்டுகளாக பாதயாத்திரை செல்கின்றனர். குன்றக்குடியில் நேற்று அதிகாலை வேல் பூஜை முடித்து காவடி பாதயாத்திரை பயணத்தை துவக்கினர்.பிள்ளையார்பட்டி, ந. வயிரவன்பட்டி ஆகிய இடங்களில் காவடிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்காவடி குழுவில் பள்ளத்துார், நேமத்தான்பட்டி கானாடுகாத்தான், கொத்தரி, மணச்சை, வடகுடி, காரியாபட்டி, கண்டனுார், பாளையூர், வேலங்குடி, கோட்டையூர், காரைக்குடி, கழனிவாசல், ஓ.சிறுவயல் பகுதியைச் சேர்ந்த 175 பேர் காவடி சுமந்து செல்கின்றனர். திருப்புத்துார் வந்த காவடிகள் திருத்தளிநாதர் கோயிலில் சாமி தரிசனத்திற்கு பின் காரையூர், மருதிப்பட்டி சென்றனர். பல இடங்களில் காவடிகளுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். யாத்திரைக்குழுவினர் சிங்கம்புணரி, சமுத்திராபட்டி, திண்டுக்கல் வழியாக ஜன.24ல் பழநியை அடைந்து சண்முகசேவா மடத்தில் மகேஸ்வர பூஜை, காவடிபூஜை, அன்னதானம் முடித்து தைப்பூச மறுநாள் ஜன.26ல் பழநி மலையேறி சாமி தரிசனம் செய்கின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago