மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் இன்னிசை விழா
22-Dec-2025
சிவகங்கை: சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் பிறப்பு பெருவிழா நடைபெற்றது. :சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்து ஆனந்தம் தலைமை வகித்தார். பாதிரியார் ஆரோக்கியசாமி, அலங்கார அன்னை சர்ச் பாதிரியார் ஜெபமாலை சுரேஷ் முன்னிலை வகித்தனர். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., சிறப்பு வகித்தார். சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலை பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், சிவகங்கை வாலாஜா நவாப் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஹாஜா மொய்தீன் வாழ்த்துரை வழங்கினர். கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் விதமாக இன்னிசை பாடல்களை பாடினர். இறை மக்கள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பங்கு பாதிரியார், இறை மக்கள் செய்திருந்தனர்.
22-Dec-2025