உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாட்டரசன்கோட்டை தேர் வெள்ளோட்டம் 

நாட்டரசன்கோட்டை தேர் வெள்ளோட்டம் 

சிவகங்கை:நாட்டரசன்கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட நாட்டரசன்கோட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயிலுக்கு, உபயதாரர்கள் சார்பில் பல லட்ச ரூபாய் செலவில் புதிய தேர் செய்தனர். இத்தேர் வெள்ளோட்டம் நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு ரதவீதிகளை சுற்றி வந்து, காலை 10:40 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கோயிலில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி பெருமாளை தரிசனம் செய்தனர். தேவஸ்தான செரஸ்தார் சுப்பிரமணியன், கோயில் கண்காணிப்பாளர் கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா, சக்கர வர்த்தி, நாராயணன் அய்யங்கார் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை