உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  திருப்புத்துாரில் புதிய பஸ் துவக்கம்

 திருப்புத்துாரில் புதிய பஸ் துவக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிங்கம்புணரி செல்லும் மகளிர் விடியல் பஸ்சிற்கு புதிய பஸ் இயக்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கினார். திருப்புத்துாரிலிருந்து முறையூர் வழியாக சிங்கம்புணரிக்கு மகளிர் விடியல் பஸ் செல்கிறது. அதில் புதிய பஸ் இயக்கம் நேற்று துவக்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன், பேரூராட்சி தலைவர் கோகிலாராணி, துணைத்தலைவர் கான் முகமது, கவுன்சிலர் ராஜேஸ்வரி, துணை மேலாளர்கள் நாகராஜன், பத்மகுமார், கிளை மேலாளர் அறிவரசன் பங்கேற்றனர். காரைக்குடி: காரைக்குடியிலிருந்து புதுவயல் வழியாக ஏம்பலுக்கு புதிய டவுன் பஸ் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பழைய டவுன் பஸ்சுக்கு மாற்றாக காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, கோட்டையூர், புதுவயல், மித்ராவயல் வழியாக ஏம்பல் வரை புதிய டவுன் பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய டவுன் பஸ் தொடக்கத்தை மாங்குடி எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ