உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி அருகே கரும்பில் புதிய நோய் தாக்குதல்

இளையான்குடி அருகே கரும்பில் புதிய நோய் தாக்குதல்

இளையான்குடி: இளையான்குடி அருகே கரும்பு பயிர்களை புதுவித நோய் தாக்கி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூர், வேலடிமடை,முனைவென்றி, குறிச்சி, பிராமணக்குறிச்சி மற்றும் மானாமதுரை அருகே உள்ள மேலநெட்டூர், ஆலம்பச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோகைகளில் வெள்ளை நிறத்தில் புள்ளி, புள்ளியாக உருவாகி புதுவித நோய் தாக்கி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் கரும்பு பயிர்கள் காலத்திற்கு உரிய வளர்ச்சி இல்லாமல் மகசூல் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இளையான்குடி விவசாயிகள் சிலர் கூறியதாவது: மேற்கண்ட கிராம பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ள நிலையில் தற்போது பயிர்களில் வெள்ளை கலரில் புள்ளி, புள்ளியாக வருவதால் காலத்துக்குரிய வளர்ச்சி இல்லாமல் மகசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆகவே ேளாண்மை துறை அதிகாரிகள் இந்த நோய் தாக்குதலை தடுக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ