உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் குழாயை சீரமைக்க புதிய ரோடுகள் உடைப்பு: மக்கள் அதிருப்தி

திருப்புவனத்தில் குழாயை சீரமைக்க புதிய ரோடுகள் உடைப்பு: மக்கள் அதிருப்தி

திருப்புவனம்:திருப்புவனத்தில் பணி நிறைவு பெறாத நிலையில் கூட்டு குடி நீர் திட்ட பணி நிறைவடைந்ததாக அதிகாரிகள் தவறான தகவலை தெரிவித்து திட்டத்தை தொடங்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு குடிநீர் குழாய் பதிப்பு பணி 16 கோடி ரூபாய் செலவில் 18 வார்டுகளிலும் தொடங்கின. 20 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்ததால் புதிய குழாய்கள் பதிக்கப்படும் போது தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உரிய திட்டமிடல் இன்றியும் உயர் அதிகாரிகள், பொறியாளர்கள் யாருமின்றி பணிகள் நடந்து வருகின்றன. நகர் முழுவதும் சிமெ ன்ட், பேவர் பிளாக், தார்ச்சாலை என அனைத்தும் உடைக்கப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. பல இடங்களில் தரமில்லாத குழாய்களை பதித்ததால் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. 70 சதவிகித பணிகள் கூட நிறைவடையாத நிலையில் கடந்த ஜூன் 17ம் தேதி பணிகள் நிறைவு பெற்றதாக அதிகாரிகள் கூறி அந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர். திருப்புவனம் போலீஸ் குடியிருப்பில் இருந்து தேரடி வீதி வரை உள்ள ரோடு 15 வருடங்களுக்கும் மேலாக போடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சியளித்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 40 லட்ச ரூபாய் செலவில் சில நாட்களுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலையை குடிநீர் குழாய் பதிப்பு பணியை எடுத்த ஒப்பந்தகாரர்கள் மீண்டும் பல இடங்களில் உடைத்துள்ளார். பதிக்கப்பட்ட குழாய்களில் தண்ணீர் கசிவதாக கூறி தோண்டி வருகின்றனர். சிவகங்கை ரோடு, யூனியன் அலுவலகம், இந்திரா நகர் உள்ளிட்ட இடங்களில் மீண்டும் குழாய்கள் சேதமடைந்ததாக கூறி பழுது பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை