மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
57 minutes ago
பயிற்சி முகாம்
57 minutes ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
58 minutes ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
58 minutes ago
சிலை பிரதிஷ்டை
59 minutes ago
இளையான்குடி பேரூராட்சியில் அரசு மருத்துவமனை அருகே பஸ் ஸ்டாண்ட் குறுகிய இடத்தில் செயல்பட்டது. போதிய இட வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர். குறுகலான இடத்தில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டதால் நகர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இளையான்குடி மக்கள் இந்த பஸ் ஸ்டாண்டுடன் அருகில் உள்ள பழைய பேரூராட்சி அலுவலக கட்டடத்தையும் இடித்துவிட்டு இப்பகுதியிலேயே பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்த வேண்டுமென்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர்.பழைய இடத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாது என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர்இளையான்குடி-சிவகங்கை ரோட்டில் புதிதாக இடம் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 3.75 கோடி செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கியது. இதற்கு இளையான்குடி பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் பணிகள் முடிவு பெற்று கடந்த பிப்ரவரியில் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.திறந்து வைக்கப்பட்டு 4 மாதங்களாகியும் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வரவில்லை.நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் மனோஜ் கூறுகையில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நிறைவு பெற்று திறப்பு விழா நடத்தப்பட்டு 4 மாதங்களாகியும் பஸ் ஸ்டாண்ட் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் வீணாகி வருகிறது.இளையான்குடி நகர் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றார்.பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடைபெற்றவுடன் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நன்னடத்தைவிதி அமலில் இருந்ததால்அங்குள்ள கடைகள், கழிப்பறை ஆகியவற்றிற்கு டெண்டர் விட முடியவில்லை.தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகள்விலக்கிக் கொள்ளப்பட்டுஉள்ளதால் இன்னும் சில நாட்களில் அங்குள்ள கடைகளுக்கு டெண்டர் விடுவதற்கான பணி நடைபெற்று வருகின்றன.பஸ் ஸ்டாண்டில் கடைகள் திறந்தவுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
57 minutes ago
57 minutes ago
58 minutes ago
58 minutes ago
59 minutes ago