உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி மேயர் மீது ஆக.7ல் நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பு

காரைக்குடி மேயர் மீது ஆக.7ல் நம்பிக்கையில்லா தீர்மான ஓட்டெடுப்பு

காரைக்குடி:காரைக்குடி மாநகராட்சியில் ஆகஸ்ட் 7ம் தேதி மேயர் முத்துத்துரை மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறுகிறது. காரைக்குடி மாநகராட்சியில் தி.மு.க.,வை சேர்ந்த முத்துத்துரை மேயராகவும், தி.மு.க., நகரச் செயலாளர் குணசேகரன் துணை மேயராகவும் உள்ளனர். முத்துத்துரை மீது அதிருப்தி தெரிவித்து 23 கவுன்சிலர்கள், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, துணை மேயர் குணசேகரன் தலைமையில், கமிஷனர் சங்கரனிடம் மனு அளித்தனர். போதிய கவுன்சிலர்கள் இருந்தும் அவசர கூட்டத்தை கூட்ட கமிஷனர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அ.தி.மு.க., கவுன்சிலர் ராம்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிபதி, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மனு அளித்த தேதியில் இருந்து, 30 நாட்களுக்குள் கூட்டம் நடத்தி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், ஆக. 7ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடைபெறும் என கமிஷனர் சங்கரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி