உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஒரு மாதமாக குடிநீர் சப்ளை இல்லை; விலைக்கு வாங்கும் கிராமத்து மக்கள்

ஒரு மாதமாக குடிநீர் சப்ளை இல்லை; விலைக்கு வாங்கும் கிராமத்து மக்கள்

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே ஒரு மாதமாக குடிநீர் பம்பு வேலை செய்யாததால் கிராமத்தினர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். வகுத்தெழுவன்பட்டி ஊராட்சி செருதப்பட்டியில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீர் உப்பு சுவையுடன் குடிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இதனால் அருகே காவனிக்கண்மாய் கரையில் தனியாக போர்வெல் போடப்பட்டு மோட்டார் மூலம் நேரடியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக இந்த போர்வெல்லில் தண்ணீர் வரவில்லை. கிராம மக்கள் உப்பு தண்ணீரை குடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் பல மீட்டர் துாரமுள்ள தோப்புகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பெரும்பாலும் விவசாயக்கூலி வேலை செய்பவர்களே உள்ள நிலையில், ஊருக்குள் லாரியில் வரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே விரைவில் போர்வெல்லை சரி செய்து குடிக்க நல்ல தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி