உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் செயல்படாத சுகாதார வளாகம் ...அச்சுறுத்தல்:பெண்கள் அச்சுறுத்தலுடன் இருப்பதாக புகார்

திருப்புவனத்தில் செயல்படாத சுகாதார வளாகம் ...அச்சுறுத்தல்:பெண்கள் அச்சுறுத்தலுடன் இருப்பதாக புகார்

திருப்புவனம்:திருப்புவனத்தில் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் செயல்படாததால், மறைவிடம் தேடி செல்லும் பெண்களிடம் சமூக விரோத கும்பல்களால் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பயத்தில் உள்ளனர். திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர்., நகர், வண்டல்நகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் உள்ள வீடுகளில் கழிப்பறை வசதிகள் கிடையாது. இவர்களுக்காக பேரூராட்சி சார்பில் எம்.ஜி.ஆர்.,நகர், பழையூர், இந்திராநகர் காலனி, தேரடி வீதி, புதூர், முஸ்லீம் தெரு உள்ளிட்ட ஏழு இடங்களில் சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டன. இதில் தேரடி வீதியில் முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. திருப்புவனத்தில் நிலத்தடி நீர்மட்டம் அபரிமிதமாக இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறை என்பதே கிடையாது. ஏழு இடங்களில் சுகாதார வளாகங்கள் இருந்தாலும் திருப்புவனம் பழையூரில் மட்டுமே சுகாதார வளாகம் செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் சுகாதார வளாகங்கள் செயல்படவே இல்லை. காரணம் சுகாதார வளாகங்களை ஒட்டி கஞ்சா விற்பனை களைகட்டுவதால் பெண்கள் அந்த பகுதியில் செல்ல முடிவதில்லை. சுகாதார வளாகங்களை பராமரிக்க செல்லும் பேரூராட்சி ஊழியர்களையும் கஞ்சா கும்பல் மிரட்டுவதால், அவர்களாலும் செல்ல முடிவதில்லை. சுகாதார வளாகங்களில் உள்ள கதவுகள், மோட்டார்களையும் கஞ்சா கும்பல் திருடி விடுகிறது. இதனால் சுகாதார வளாகங்கள் செயல்படுவதே இல்லை. இதனால் பெண்கள் அச்சுறுத்தலுடன் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை