உள்ளூர் செய்திகள்

வட மஞ்சுவிரட்டு

சிவகங்கை : சிவகங்கையில் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமஞ்சுவிரட்டு நடந்தது. சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 மாடுகளும் 144 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.வட்டமாக அமைக்கப்பட்ட திடலின் நடுவே வடத்தால் கட்டப்பட்ட ஒவ்வொரு காளையையும் 20 நிமிடங்களில் 9 பேர் கொண்ட மாடுபடி வீரர்கள் அடக்க வேண்டும்.காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர், பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி