உள்ளூர் செய்திகள்

நுாலகர் தின விழா

திருப்புத்துார்:திருப்புத்துார் கிளை நுாலகத்தில் தேசிய நுாலகர் தின விழா முப்பெரும் விழாவாக நடந்தது. கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் ஏ.டி.விக்டர் தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர் எல்.ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். நுாலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். இளையோர் பேச்சரங்கம் நடந்தது. கவிஞர்கள் அப்துல்வாஹித்,கோவிந்தராஜன்,தமிழரசன் வாழ்த்தினர்.புரவலர்கள் ஏ.டி.விக்டர், ரூபன் கெளரவிக்கப்பட்டனர். உதவியாளர் குணசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !